காக்கை நட்பு...!
காக்கைக்கும்
எனக்கும் என்ன உறவு?
என் தலை அதன்
கழிவை சுமக்கும் வரை?
குரலெடுத்துக்
கறைந்துப்
பெருங்கூட்டம்
சேர்த்து....,
தலைச்சாய்த்து
நான் இட்ட உணவினை,
இனத்தோடு பகிர்ந்து
ஆத்திசூடியில்
புரியாததை
அடுப்பங்கரையில்
புரியவைத்தபோது.........நண்பன்!
புகைப்படமாய்ப்
போன உறவுகளின்
படயல் தினத்தன்று,
அழயா விருந்தாளியாய்
மூதாதையரின்
ஆசீர்வாதம் சுமக்கும் போது அது........ புனிதன்!
என் தோள்தட்டி
விருட்டென்று வானில் பறந்து
ஏதோ என்று
நிமிர்கையில் ......
தலையில் எச்சம் இடும் போது.. அது சனியன்.......?!!
தலையில் எச்சம் இடும் போது.. அது சனியன்.......?!!
Paavam kakka ......azhagai irukku kavidhai
ReplyDelete