Friday, 26 February 2016
Aagasam
ஆகாசம்
அகன்ற வான்வெளியில்
இலக்கற்ற பட்டம் போல்
எண்ணங்கள் அங்கும் இங்கும்
அலைந்து கொண்டிருந்தன…
பார்வையில் படா நூலிழைப்போல
ஏதோவொன்று என்னையும்
எண்ணங்களையும் பிணைத்திருந்தது…
எண்ணங்கள் என்ன செய்யமுடியும்?
அது வண்ணங்களை காண்பித்து
வாசனையை நுகரச் செய்தது
நிழலோடிய நேற்றைய நிகழ்வுகளை
இன்றைய உண்மையை போல உணர்த்தியது
சோகமாகவும், கோபமாகவும்
இல்லாப் பொருட்களை இருப்பது
போலவும்
நிகழ் காலத்தை கடந்த காலச்சுவுடுகளின்
கண்ணாடியாகவும் சித்தரித்தது…
…
கால்களற்ற கால ஓட்டத்தை
சீரற்றதாக ஆக்கியது..
தனித்திருந்த ஒரு வேளை
விழித்திருந்ததாகவும் ஆகிய போது..
“நூலிழையைப் போல ஏதோவொன்று”
பட்டென்று அறுந்தது…
எண்ணங்களற்ற வெற்றுடம்பில்
நான் துலைத்து, சுயம்பிரகாசம்
மட்டுமே நிலைத்திருக்கிறது!!
Thursday, 25 February 2016
Subscribe to:
Posts (Atom)